3000 தியேட்டரில் விஜய்யின் ‘ஜனநாயகன்’
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். கடந்த 6 மாதமாக தணிக்கை வாரிய பரிசீலனையில் இருந்து வந்த இப்படத்திற்கு சமீபத்தில் ‘ஏ’சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் ஜனநாயகன் படம் வரும் 23-ந் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவித்துள்ளது.தமிழகத்தில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மேலும் வெளி மாநிலங்கள், நாடுகளிலும் சுமார் 3000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் வருவதால் ரசிகர்கள் உற்சாகமாக படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர்.