சூரி நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்
நடிகர் சூரி தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்ததாக நேற்று இன்று நாளை மற்றும் அயலான் ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் 2015 ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த பெரும் வெள்ளத்தின் துயர சம்பவங்களை மையமாக வைத்து உருவாக உள்ளது. இதன் டெஸ்ட் சூட் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.