சூரியின் மண்டாடி படத்தை வாங்க கடும் போட்டி!!
காமெடி நடிகராக இருந்த சூரி விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்ததை தொடர்ந்து கருடன் கொட்டுக்காளி, விடுதலை 2 மற்றும் மாமன் என ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். தற்போது அவர் `மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். விடுதலைப் படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இதில் சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.இதில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் மீனவராக சூரி நடிக்கிறார். ராமநாதபுரம் அருகே படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் சுமார் 50 கோடிக்கு வாங்கி உள்ள நிலையில் இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா தியேட்டர் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.