இந்த சமுதாயம் சீர்கேட்டை நோக்கி செல்கிறது.
நமது தேசத்திற்கான ஒரு பாரம்பரியம் உள்ளது. அறம் சார்ந்த வாழ்க்கையை நம்பி வருகிறோம்.
நாம் எல்லோரும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம்பிக்கையில் உள்ளோம்; ஆனால், ஓர் ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையில் கணவன் மனைவி இருவரும் விரும்பினால் பலருடன் சேர்ந்து வாழலாம் என்பதாக கூறப்பட்டிருந்தது.
நமது சமுதாயம் சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
நமது சமுதாயத்திற்கு அடிப்படையாக உள்ளது குடும்ப வாழ்க்கை தான். குடும்ப வாழ்க்கையை காப்பாற்ற வேண்டுமானால் தியானத்தோடு இயைந்து வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு