இந்தியாவிற்கான வரியை குறைத்தது அமெரிக்கா!
* ரஷ்யாவுக்கு பதிலாக அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்க PM மோடி ஒப்புக்கொண்டதாக US அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்..
இதனையடுத்து இந்தியா மீதான வரி 25%-ல் இருந்து 18%-ஆக குறைக்கப்படும் என்றவர், USA பொருள்கள் மீதான வரியை 0-ஆக குறைக்க இந்தியாவும் நடவடிக்கை எடுக்கும் என்றார்..
* மேலும் மோடியுடன் தொலைபேசியில் பேசிய அடுத்த சில நிமிடங்களில் டிரம்ப் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான பேச்சுவார்த்தை ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவிட்டது:
* அவர் (பிரதமர் மோடி) ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் பெரும்பாலும் வெனிசுலாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்கவும் ஒப்புக்கொண்டார்..
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு (Trade Deal) நாங்கள் சம்மதித்துள்ளோம்..
* அமெரிக்கா தனது பரஸ்பர வரியை (Reciprocal Tariff) 25%-லிருந்து 18%-ஆக குறைக்கும். அதேபோல், இந்தியாவும் அமெரிக்காவிற்கு எதிரான தங்களின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாக (ZERO) குறைக்க முன்வரும்..
அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல தயாரிப்புகளில் $500 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை வாங்குவதோடு, மிக உயர்ந்த அளவில் “அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம்” (BUY AMERICAN) என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்..