மலைவாழ் மக்களின் உண்மை கதை…

மலைவாழ் மக்களின் உண்மை கதை…

அருளாளன் பட ஹைலைட் சொன்ன இயக்குனர்:

சமீப காலமாக தமிழ் சினிமாவில் உண்மை கதைகள் அதிக அளவில் வெற்றி பெறுகின்றன அதன் அடிப்படையில் தேனி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் கல்வியின் அத்தியாவசியம் குறித்து ஒரு உண்மை கதை படமாகிருக்கிறது.தகராறு, தேன், வீரசிவாஜி போன்ற படங்களை இயக்கிய கணேஷ் விநாயகன் இயக்கி உள்ள படம் ‘அருள்வான்’. இந்த படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், கிருத்திகா உள்பட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ்.வி. சரவணன் மற்றும் சுபா சரவணன் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த படம் வருகிற 17-ந்தேதி ரிலீஸ் ஆகிறது . சக்தி பிலிம் பேக்டரி படத்தை வெளியிடுகிறது.

இந்த நிலையில் படம் குறித்து இயக்குனர் கணேஷ் விநாயகன்கூறியதாவது உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் மாணவி ஒருவர் படிப்புக்காக போராடி கலெக்டர் உதவியுடன் வெற்றி பெற்ற சம்பவத்தை கருவாக கொண்டு படத்தின் கதை உருவாக்கியுள்ளேன். கதையை அருள்நிதிக்கு சொன்னவுடன் சம்மதித்து விட்டார். தேனி மாவட்டம் குரங்கனி மலையில் 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். அருள்நிதி இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளார் அவருடைய தோற்றமும் இதில் வித்தியாசமாக இருக்கும்.கலெக்டர் முத்துவேல் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஆரவ் குழந்தைக்கு தந்தையாகவும், ரம்யா பாண்டியன் தாயாகவும் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரம் கிருத்திகா சிறப்பாக நடித்துள்ளார்.இந்த படத்திற்கு உயிர்நாடியே ஜிவி பிரகாஷின் இசைதான் இந்த கதையை கேட்டவுடன் அவர் கதையுடன் ஒன்றிவிட்டார் இதற்காக தனி கவனம் செலுத்தி பின்னனி இசையை கொடுத்துள்ளார் படம் வெளியான பிறகு பேக்ரவுண்ட் ஸ்கோர் மிகப்பெரிய அளவில் பேசப்படும்.இதில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அதில் யுக பாரதி எழுதிய ஒரு அற்புதமான பாடலை ஜிவி பிரகாஷ் தனது சொந்த குரலில் பாடி உள்ளார்.

சுகுமார் ஒளிப்பதிவில் படம் அற்புதமாக வந்துள்ளது. அடுத்ததாக படத்திற்கு இன்னொரு பலம் ஒளிப்பதிவாளர் சுகுமார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை தனது கேமரா மூலம் அழகாக படம் பிடித்துள்ளார் திரையில் நீங்கள் பார்க்கும் பொழுது ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் அதோடு இதுவரை பார்த்திராத இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 17ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது “என்றார்.

பாக்ஸ்
டென்ட் கொட்டகையில் தங்கிய நடிகர்கள்:
ஷூட்டிங் நடந்த மலைப்பகுதிக்கு கேரவன் செல்ல முடியாததால் அனைவரும் இரண்டு மணி நேரம் நடந்தே மலையறினோம் மீண்டும் கீழே வந்து விட்டு செல்வதற்கு முடியாது என்பதால் பத்து நாட்கள் அங்கேயே டென்ட் கொட்டகையில் தங்கி இருந்து படப்பிடிப்பை நடத்தினோம்.மலைப் பகுதியில் நடந்த படப்பிடிப்பிற்காக அருள்நிதி உள்பட படக்குழுவினர் கொட்டகையில் தங்கினர்.

Comments (0)
Add Comment