ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடந்த சுமார் ரூ.40,000 கோடி வங்கி மோசடி மற்றும் பணமோசடி தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் புனித் கார்க்கை அமலாக்கத்துறை ஜனவரி 29, 2026 அன்று கைது செய்துள்ளது.
சிபிஐ கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புனித் கார்க் 2001 முதல் 2025 வரை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்