மீண்டும் இணையும் துரந்தர் கூட்டணி
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார், நடிகர் ரன்வீர்சிங் கூட்டணியில் வெளியான துரந்தர் மற்றும் ‘துரந்தர் 2’ படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் 1300 கோடிக்கு மேல் வசூலித்தது. இரண்டாம் பாகம் ரூ.1,780 கோடிக்கு மேல் கடந்து வசூலில் புதிய சாதனை படைத்தது. இதை தொடர்ந்து ஆதித்யா தார் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் மீண்டும் புதியபடமொன்றில் இணைய உள்ளனர். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் இயக்குனர் ஆதித்யா தார் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.