தாய் கிழவி-விமர்சனம்
மதுரை அருகே கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் கறார் பேர்வழி ராதிகா சரத்குமார். இதனால் அவரை கண்டு ஊரே பயந்து நடுங்கி ஓடுகிறது. திடீரென அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட,இதைக் கேட்டு ஊரே மகிழ்ச்சியில் துள்ளி குதித்து, எப்போது சாவு செய்தி வரும் என ஆவலோடு காத்திருக் கின்றனர்.படுக்கையில் இருக்கும் ராதிகா கை மூலம் ஒரு செய்கை செய்கிறார்.அது என்ன? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே படத்தில் மீதி கதை. இதில் பவுனுத்தாய் கேரக்டரில் ராதிகா வாழ்ந்திருக்கிறார். அவருடைய திரை வாழ்வில் இப்படம் ஒரு மணிமகுடம். மகன்களாக நடித்துள்ள அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன் மற்றும் மகளாக நடித்துள்ள ரேச்சல் ரெபாக்கா ஆகியோர் தேர்வு சிறப்பு. முனீஸ் காந்த், முத்துக் குமார், ஆத்தாடி குமார் ஆகியோர் கூடுதல் பலம்.படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்துவம் கொடுத்து இருப்பது இயக்குநர் சிவக்குமார் முருகேசனின் தனி சிறப்பு.அதோடு பெண்களுக்கு தைரியத் தையும்,தன்னம்பிக்கையும் விழிப்புணர்வோடு சொல்லி இருக்கிறார். விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு, நிவாஸ் கே.பிரசன்னா இசை மொத்த படத்தையும் ரசிக்க வைக்கிறது.