தீவிரவாத தாக்குதல்

கொலம்பியாவில் உள்ள கவுக்கா மாகாணத்தின் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பஸ் சென்று கொண்டிருந்தது. கஜிபியோ என்ற நகர் வழியாக சென்ற போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பஸ்சில் இருநு்த 13 பேர் உயிரிழந்தனர். 38 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவர்.

கொலம்பியா நாட்டின் ஆயுத படை படைகளின் தளபதி ஜெனரல் ஹூகோ லோபஸ் கூறுகையில், இது தீவிரவாத தாக்குதல். கொலம்பியாவின் மிகவும் தேடப்பட்டு வரும் போதை கடத்தல் கும்பல் தலைவன் ஆன இவான் மோர்டிஸ்கோ மற்றும் ஜெய்மே மார்டினஸ் குழுவினரின் சதி வேலையாகும் என்று குற்றம் சாட்டினார். இந்த தாக்குதலுக்கு கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment