கோர விபத்து!

கோர விபத்து!

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் லாரி மற்றும் ஜீப் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உறவினர் ஒருவரின் அஸ்தியைக் கரைப்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த துயர விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment