சூப்பர் பி மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சூப்பர் பி மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
ஆம்பிஷியஸ் புரொடக்‌ஷன் ஹவுஸின் 2வது படைப்பான ’சூப்பர் பி மேன்’படத்தின் மூலம் இதுவரை காணாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’3.33’ கதைக்களம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் மற்றும் சைக்கலாஜிக்கல் அம்சங்களுடன் இருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது ’சூப்பர் பி மேன்’ மூலம் ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோ மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களுடன் பிரம்மாண்ட களத்திற்குள் நுழைந்துள்ளது. ‘சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. டி.ஜீவிதா கிஷோர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ’3.33’ திரைப்படத்தின் இயக்குநரான நம்பிக்கை சந்துரு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக மாறுவது படத்தின் ஹைலைட். இந்த படத்திற்க்கு சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார்.

Comments (0)
Add Comment