தஞ்சாவூர் கழக நிர்வாகிகள் சந்திப்பில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை
நான் போன மீட்டிங்கில் வேலூரில் பேசும் போது சொல்லியிருந்தேன். தமிழ்நாடுதான் விஜய். விஜய்தான் தமிழ்நாடு. அப்படின்னு நான் சொல்லியிருந்தேன். அத ஏன் அப்படி சொன்னேன்னா, தமிழ்நாட்டு மக்களுடைய ஒரே பிரதிநிதியா, உண்மையான ஒரு பிரதிநிதியா நாம மட்டும்தான் இருக்கிறோம். அப்படி என்கிறதுக்காகத்தான் அப்படி நான் சொன்னேன்.
அப்புறம், தேர்தல் பத்தியும் நான் சொல்லியிருந்தேன். தமிழ்நாடு வெர்ஸ்சஸ் ஸ்டாலின் சார். அதாவது விஜய் வெர்ஸ்சர் ஸ்டாலின் சார். அதையும் நான் சொல்லியிருந்தேன். அப்புறம் இன்னொரு கேள்வியும் கேட்டிருந்தேன். இது தமிழ்நாடு சட்டசபைக்கான ஒரு தேர்தல். இதை ஏன் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான எலெக்சன் என்று சொல்லுறீங்க. அப்படின்னு நான் கேட்டிருந்தேன். உடனே விஜய் வந்து பாஜகவுக்காக பேசுகிறார். அப்படியெல்லாம் திரிச்சி பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ, ரெகுலரா ஒன்று பண்ணுவாங்களா, நம்முடைய சிறுபாண்மையின சகோதரர்களை பயமுறுத்தி பயமுறுத்தி ஒரு ஏமாத்து வேலையை செய்வாங்களே, இனியும் அவங்களாக தொடர்ந்து செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெரிந்து போச்சி.
அதனால்தான் நான் என்ன பேசினாலும் அதை திரிச்சி பேசுறது, அந்த தில்லுமுல்லு வேலைகளையெல்லாம் அவுங்க செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. சென்னையில டெல்லி டெல்லின்னு கூவுறதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்துட்டா டெல்லிக்கு வெள்ளைக்கொடி பிடிக்கிறதும், இதெல்லாம் யாருன்னு உங்களுக்கு நல்லாகவே தெரியும். தமிழ்நாட்டை காப்பாத்துறது திமுகத்தான், தமிழ்நாட்டை பிளைக்க வைக்கிறது திமுகத்தான், இதையெல்லாம் பண்ணுறது திமுகத்தான், ஸ்டாலின்சார் தான். இதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது பாஸ். சின்ன பசங்கயெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க, ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி. அதனால இந்த தமிழ் தமிழ் தமிழ்நாடு…
இன்னொருவேற சொல்றாங்க, இதென்னென்னா, தமிழ்நாட்டு அணி, டெல்லி அணியாம். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியை தொட்டுக்கூட பாக்க முடியாது. அப்படி இருக்கும்போது கிரிக்கெட்டிலேயும் விசில போடுறது தமிழ்நாடுதான். சிஎஸ்கே. வர்ற எலெக்சனிலும் விசில் போடப்போவது நம்ம டிவிகேதான். தமிழ்நாடுதான் டிவிகே… டிவிகேதான் தமிழ்நாடு. இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி இதெல்லாம் அனைத்தும் உடைஞ்சு நொறுங்கும் டிவிகே அடிச்சி நொறுக்கும். எனக்கும், என்னுடைய மக்களுக்கும் நடுவுல வேறு யாராலும் உள்ளே நுழைய முடியாது. இது ஒரு அம்மா பையன் உறவு… அப்பா புள்ள உறவு… அண்ணன் தங்கச்சி உறவு… அண்ணன் தம்பி உறவு… அக்கா தம்பி உறவு. இது சும்மா எலெக்சனுக்கு வந்த உறவுன்னு நினைச்சிறாதீங்க, இயற்கையாகவே அமைந்த உறவு. இது எவ்வளவு டீப்பான உறவுன்னு நான் உணர்ந்திருக்கிறேன்.
அதே மாதிரி நம்ம தமிழ்நாட்டு மக்களும் உணர்ந்திருக்கிறாங்க. இன்னும் சிம்புள்ளா சொல்லனும்ன்னா, மத்தவங்களுக்கு வேண்ணா இது எலெக்சன். ஆனா, எனக்கும் என்னை நேசிக்கிற மக்களுக்கும் இட்டீஸ் இமோசன். இட்டீஸ் நாட் ஆர்டினரி இமோசன். இட்டீஸ் பர்புள் ஓசியானிக் இமோசன். (This is emotion. This is not ordinary emotion. This is powerful oceanic emotion) இப்படி இருக்கும்போது வீட்டுக்கு வீடு விஜய், தமிழ்நாட்டுக்காக விஜய், வெற்றி பேரணியில் தமிழ்நாடு இதெல்லாம் 100 சதவீதம் இந்த எலெக்சனில் அது ப்ரூவாகும்.
நீங்க எல்லாரும் எனக்கு ஒரு உறுதிமொழியை கொடுக்கணும். ஊழலற்ற உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட நம்ம ஆட்சியை அமைப்பீங்க தானே. உங்களே பார்த்துதான் கேட்கிறேன். நம்ம ஆட்சியை அமைப்பீங்கதானே. இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீங்க தானே. உண்மையிலேயே கொடுப்பீங்க தானே. இந்த விஜயை நம்புறீங்கதானே. ஒவ்வொரு வீட்டிலேயும் விசில் சத்தம் கேட்குங்தானே. அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்திலேயும் புயலா ஒலிக்கும்தானே.
தேங்க் யூ தேங்க் யூ
ஒரு டாக்டர் இருக்காருன்னா, நாம எப்போ அவர பத்தி யோசிப்போம். இப்போ நமக்கு எதாவது உடம்பு சரியில்லன்னா அவர யோசிப்போம், அவர் ஞாபகம் வரும். அதுமாதிரி நமக்கு ஒரு பிரச்சினைன்னா, ஒரு வக்கீல தேடிப்போவோம், அவர் ஞாபகத்துக்கு வருவாறு. இது மனித இயல்பு. அந்தந்த பிரச்சினை வரும்போது அவங்கல தேடிப்போவோம். நாம சாப்பிடும்போதுகூட நம்மல அறியாமலயே ஒருத்தர பத்தி நினைப்போம். நம்மல அறியாமலயே அவங்களுக்கு நன்றி சொல்லுவோம். அந்த மதிப்பிற்குரிய அந்த மனிதர்கள் வேறு யாரும் இல்ல. விவசாயி… விவசாயி… விவசாயி. அவுங்க பார்க்கிறதுக்கு வேணும்னா சாதாரணமா இருப்பாங்க. ஆனா அவுங்க சாதாரண மனிதர்கள் எல்லாம் கிடையாது.
இந்த உலகத்தையும் மனிதர்களையும் படச்சதுன்னு கடவுள்ன்னு சொல்லுவாங்க, ஆனா, அந்த கடவுளுக்கே படையல் போடுகிற உயர்ந்த மனிதர்கள்தான் நம்ம விவசாயிகள். இந்த பூமியில உயிர் இருக்குது, இந்த பூமியில பூ பூக்கும், காய் காய்க்கும், பூத்து குலுங்கும்ன்னு இந்த பூமியை அழகா காட்டி, இந்த பூமியை சாமியாக்குறதுல்ல இயற்கையோட சேர்ந்து நம்ம விவசாயிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. அதனால, நான் ஓவரா சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு இந்த அடுத்த ஜென்மம், மறுபிறவி பத்தியெல்லாம் எனக்கு தெரியாது. அது உண்மன்னா, அடுத்த ஜென்மத்துல, நான் ஒரு விவசாயி குடும்பத்துல பிறக்கனும்ன்னு ஆசைப்படுறேன்.
எனக்கு விவசாயத்தை பத்தி டீடைல்லா தெரியாதுன்னு ஒத்துக்கிறேன். ஆனா மத்தவங்க மாதிரி நானும் டெல்டாகாரன்தான் அப்படின்னு உங்க காதுல டால்டா ஊத்த நான் வரல. எனக்கு விவசாயத்தை பத்தி டீடைல்லா தெரியலன்னா கூட அவுங்க படுற கஷ்டங்க எல்லாம் எனக்கு நல்லா தெரியும். நம்முடைய முதல் அரசியல் பயணம் தொடங்குனதே அந்த பரந்தூர் விசயத்தை கையில் எடுத்துதான். அதனால நம்முடைய ஆட்சி அமைந்ததும் தீர்க்க வேண்டிய முக்கியமான பிரச்சினைகளில் விவசாய பிரச்சினையும் ஒன்னு.
முதல்வர் அவர்களுக்கு ஒரு அடிப்படை பிரச்னை தெரியுமா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஐநா சபை ரிப்போர்ட் ஒன்னு வெளியிட்ருந்தாங்க.. அதுகூட தினத்தந்தி நியூஸ்ல வந்துச்சு. உடனே கூகுள் பண்ணி தேடாதீங்க. உங்க ஏஜென்சி வச்சு சர்வே ஏதும் எடுக்காதீங்க.. நானே சொல்றேன்..
தண்ணீர் திவால் – என்ற கட்டுரைல தண்ணீரலாம் திவாலாக போகுதுன்னு கட்டுரையை படிச்சவுடன் மனசுக்கு பகீர்னு தோணுச்சு.. இன்னும் கொஞ்சம் காலத்துலே தண்ணீரே இல்லாம திவாலாக போகுதாம். அதுக்கு காரணம் நிலத்தடி நீரை பாதுக்காக்காம விட்டதுதானாம். மண்ணையும், மணலையும் கொள்ளையடிச்சா வேற என்ன நடக்கும்.
மலைகளை முழுங்குனா வேற என்ன நடக்கும், கனிம வளங்களை கொள்ளையடிச்சா பின்ன வேற என்ன நடக்கும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நீங்க போதுமான நடவடிக்கை எடுக்கலைனு சென்னை உயர்நீதிமன்றம் சொன்னதை மறந்துடீங்களா.. மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை எல்லாம் பண்றது மணல் மாஃபியான்னு மதுரை உயர்நீதிமன்ற கிளை சொன்னதை மறந்துடீங்களா.. மணல் மாஃபியா கும்பலுக்கும் திமுக வுக்கும் உள்ள தொடர்பு இல்லனு சொல்ல முடியுமா
அவங்களோட டீலிங்ல இருக்குறது யாரு நீங்கதானே.. அது இல்லன்னு சொல்ல முடியுமா?
தண்ணீர் திவாலாக போகுது, மணல் திவாலாக போகுது, கனிமவளம் திவாலாக போகுது.. மொத்தத்துல உங்க ஆட்சியில தமிழ்நாடே திவாலாக போகுது. கடன் மேல கடன் வாங்கிட்டு, உங்க கவர்மெண்ட்டே குப்புற அடிச்சி படுத்துடுச்சு.
நம்ம விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைய வச்ச நெல்லலாம் மழலைல நினைஞ்சு வீணாப்போனத, டெல்டா காரன்னு சொல்லிக்கிற நீங்க அதெல்லாம் கவனிச்சீங்களா? அவங்க போராட்டம் எதுக்காவது கூட போய் நின்ருக்கீங்களா.. குண்டாஸ்ல மட்டும் போடுறதுதானே உங்க சாதனை!
பரந்தூர் பிரச்சனையில உங்க உண்மையான நிலைப்பாடு என்ன?
மேல்மா பிரச்சனையில உங்க உண்மையான நிலைப்பாடு என்ன?
தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஆறுகளையும் இணைப்போம். இந்தியாலேயே அதைப்பற்றி நாங்கதான் அதைப்பற்றி யோசிச்சோம்னு பெருமையா சொல்ற திமுக அரசோட நேக் என்னனு சொல்லவா..
பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தவுடனே பண்ண மாட்டாங்க,
ஆட்சி முடிகிற கடைசி ஒரு வருஷம், ஆறு மாசம், ஒரு மாசத்துலதான் அடிக்கல் நாட்டுவாங்க.. அதுக்கப்புறம் election வரும் தோத்துருவாங்க.. கேட்டா எங்க ஆட்சிதான் முடிஞ்சிருச்சேன்னு நாடகம் ஆடுவாங்க.
மக்கள் மேல உங்களுக்கு உண்மையா அக்கறை இருந்துச்சுன்னா, ஆட்சிக்கு வந்தவுடனேயே பெரிய பெரிய திட்டங்களை ஸ்டார்ட் பண்ணி பண்ண வேண்டியதுதானே…
அது என்ன ஆட்சி முடியும்போது அடிக்கல் நாட்டுறது. ஓட்டுக்காக என்னென்னலாமோ பேசுவீங்க. ஆனா, மக்கள் இதெல்லாம் நம்ப ஏமாளிங்கன்னு நினைச்சீங்களா?
மக்களே நம்ம ஆட்சி அமைந்ததும் பெரிய பெரிய திட்டடங்கள் எல்லாம் உடனே ஸ்டார்ட் பண்ணி பண்ணுவோம். அதை அஞ்சு வருசத்துக்குள்ள முடிக்கவும் ட்ரை பண்ணுவோம்.
இப்படியெல்லாம் நம்ம பேசுனா, காவிரி பிரச்சனைல உன் கருத்து என்ன, முல்லைப் பெரியாருல உன் கருத்து என்ன, அதெல்லாம் பற்றி உனக்கு தெரியுமா அப்படின்னு கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஐயா, உலகமகா மேதைகளே,
ROV – Remotely operated vehicle – அதை வச்சு தண்ணிக்குள்ளேயே போய், அணைகளோட உறுதி தன்மைகளை ஆராய்ந்து ;பார்க்குற அளவுக்கு நானும் எல்லாம் தெரிஞ்சுதான் வச்சுருக்கேன். ஒருத்தன் அமைதியா இருக்கான்னா, உடனே அவனுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிறாதீங்க.. சும்மா கருத்து சொல்லிக்கிட்டு, கம்பு சுத்திகிட்டு இருந்தா எல்லாம் நடந்துடுமா, நசநசன்னு பேசிபேசி, அதை கேட்டுகேட்டு மக்கள் வெறுத்து போயிட்டார்கள்.
உருப்படியா ஏதாவது யோசிங்கன்னு மக்கள் யோசிக்கிறது, யாருக்கு தெரியுதோ இல்லையோ, எனக்கு நல்லாவே தெரிகிறது. உரிய இடத்துக்கு போய், சம்பந்தப்பட்டவங்ககிட்ட பேசி, அதுக்கான solution என்னென்னு தெரிஞ்சிக்கிட்டு, அதை proper ஆ execute பண்ணனும்..
அடுத்து நம்முடைய கடல் விவசாயிகளான நம்முடைய மீனவர்கள். மீனவர் பிரச்சனைக்கு அப்பப்போ முதல்வர் கடிதம் எழுதிட்டு தூங்கபோயிருவாரு.. அதோட அது அப்படியே கிடக்கும், மானே, தேனே, பொன்மானே.. இப்படி கடிதம் எழுதுறதுலாம் வேலைக்கே ஆகாது.. ஒன்றிய அரசுக்கு அந்த உண்மையான, உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை கொடுக்கணும், நம்ம மீனவர்கள் மேல கையே வைக்க கூடாது, கையே வைக்க விட கூடாது. அவங்க பாதுகாப்பு பக்காவா இருக்கணும், அதான் நம்ம அஜெண்டா.
மீனவர்களே, அடுத்து நம்மோட ஆட்சிதான். கவலைப்படாதீங்க, தைரியமா இருங்க, உங்க பாதுகாப்பு பக்காவா இருக்கும். அடுத்து நம்ம ஆட்சிதான். இப்படியிருக்கும்போது, அடுத்ததும் நாங்கதான்னு சிஎம் சார் சொல்வார், அதெல்லாம் நடக்கவே நடக்காது. இரண்டாவது முறை வந்ததெல்லாம் சரித்திரமே கிடையாது.
சீனால great wall of china, அதோட நீளத்தை விட பெரிய டாஸ்க் இது. அவங்க அப்பாவாலேயே முடில.. நான் முன்னாடியே சொன்னமாதிரி, உரிய இடத்துக்கு போய், சம்பந்தப்பட்டவங்ககிட்ட பேசி, அதுக்கான solution என்னென்னு தெரிஞ்சிக்கிட்டு, அதை proper ஆ execute பண்றதுதான் தெளிவான அரசியல். சும்மா ஆறுதல் சொல்றதெல்லாம் இல்லை. இது ஹம்பக் அரசியல். அரசியலுக்கு வந்துட்டா, கலெக்சன் பார்க்கலாம் என்பதெல்லாம் அரசியல் கிடையாது. உண்மையிலேயே மக்களுக்கான உழைப்பு இருக்கணும். இது மக்களுக்கு நல்லாவே தெரியும். இது எதிரிகளுக்கு நல்லா தெரியும். அதனால்தான் நம்மை சுத்தி அத்தனை சதிகள். இதுல முக்கியமான சாதி என்னனு தெரியுமா… இந்த பாரு ஒன்னு நீ, இல்லனா நா, நா இல்லனா நீ, நீ இல்லனா நான். நமக்குள்ள வேற எவனும் நடுவுல வந்துட கூடாது. நாம ரெண்டு பேரால மட்டும்தான் மக்களை ஈஸியா ஏமாத்த முடியும்.
இந்த விஜய் வந்ததால நம்ம பொழப்பே போச்சு… மக்கள் வேற அவனதான் நம்புறாங்க… நாம வெளிய அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்கிட்டாலும், உள்ள… நம்மளோட டீலிங் பக்காவா இருக்கனும். ‘மக்களோட பீலிங்க்ஸ் பத்திலாம் நமக்கு கவலயே இல்ல… நமக்கு டீலிங்தான் முக்கியம்’. மாத்தி மாத்தி ஆட்சிக்கு வந்துடலாம்னு நினைச்சோம்… அது நடக்காது போல்ருக்கு… அதுனால, நீ என்ன பண்ற… ‘எஸ்.ஓ.பி., எஸ்.ஓ.பி.,’-ன்னு போட்டு ஒரு பக்கம் அவனத் தடுத்துரு… இன்னொரு பக்கம், ‘அவன் மேல பழி மேல, பழி மேல, பழி போட்டு நானும் தடுத்துர்ரேன்…’ என்ன ஒ.கே.வா? டீலிங் ஓ.கே.வா? ஓவர்… ஓவர்…
இல்லங்க… உண்மையிலயே சிரிக்கிறதா… என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியல…
உண்மையிலேயே இப்டிதான் இருக்கு அவங்க டீலிங்லாம்….
இப்டி பழி மேல பழி போட்டு… கரூர்ல ஆரம்பிச்சு, நம்ம ஜனநாயகன் படம் ரீலிஸ் வரைக்கும்… ஆனா, இந்த ரிலீஸ் பிரச்சினைல நிறையப் பேரு குரல் கொடுத்தாங்க… முக்கியமா, நம்ம முதல்வர் அவர்கள்கூட பூசி மொழுகி, பட்டும் படாம குரல் கொடுத்தாங்க… But whatever it is… குரல் கொடுத்த அவங்களுக்கும், மத்தவங்க எல்லாருக்கும் இந்த நேரத்துல என்னோட நன்றிய தெரிவிச்சுக்கிறேன்.
இப்டி, நாம வெளிப்படையா பேசுறதுனால, சி.எம்.சாரோட மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா?
ஏற்கெனவே கட்சிக்காரங்க தொல்லை தாங்கமுடியல; தூங்கவிடமாட்றாய்ங்க… இந்த விஜயும் வந்து தூங்கவிடமாட்றான்; நம்மபாட்டுக்கு ஹைவேல, சைக்கிள்ல ஷோலோவா போகலாம்னு நினைச்சோம்; இவன் என்னடான்னா மக்கள் சக்தியோட வந்துட்டு இருக்கான்; இவன்தான் கேள்வி கேக்குறான்னு பார்த்தா, மக்களையும் கேள்வி கேக்க வைக்குறான். ஆயிரம் ரூபா கொடுத்துட்டு இருந்தோம்.. ஐயாயிரம் ரூபா கொடுத்து ஏமாத்தலாம்னு பார்த்தா, அதயும் கேள்வி கேக்க வைக்கிறான். விசில் சத்தம் வேற விண்ண முட்டுது; கூட்டணிக் கட்சிகள் தொல்லை வேற தாங்க முடியல; இவன் பண்ற பிரச்சாரத்தையாவது முடக்கலாம்னு பாத்தா, அப்பவும் மக்கள் அவன் பின்னாடிதான் நிக்கிறாங்க… என்ன பண்றது… ஏது பண்றதுன்னு தெரியாத ஒரு மனநிலைல இருப்பாரு. ஆனா, சார் நீங்க இந்த விஜய முடக்கலாம். ஆனா, ஒவ்வொரு வீட்டுல இருக்கிற ஒவ்வொரு விஜயயையும், ஒவ்வொரு விஜியையும் உங்களால முடக்கவே முடியாது. அவங்கள்லாம் ஆல்ரெடி பிரச்சாரத்த ஸ்டார்ட் பண்ணிட்டாங்க சார்… வீட்லயே… குடும்பம் குடும்பமா… இறங்குவாங்க பாருங்க பிரச்சாரத்துக்கு! அப்போ உங்களால மட்டுமில்ல, எந்தக் —– யாராலயும் தடுக்க முடியாது.
நம்ம டவுன் சவுத்ல, ஒரு ஊர்ல, உங்க அப்பாவுக்கு வெங்கல சிலை வைக்கனும்னு டிரை பண்ணிங்கள்ல.. அதுக்கு சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னாங்க? மக்களோட பணத்துல யாருக்குப் புகழ் பாட பாக்குறீங்க அப்டினு கேட்டாங்கள்ல… அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரான் வீட்டு நெய்யுல உங்க வீட்டுக்கு ஸ்வீட்டு செய்யாதீங்க… ஊரான் வீட்டு நெய்யுல உங்க வீட்டுக்கு ஸ்வீட்டு செய்யாதீங்கன்னு அர்த்தம்.
மக்களோட அடிப்படை வாழ்வாதாரத்துக்கு எதாவது கேட்டா, நிதிச்சுமை… நிதிச்சுமைன்னு சொல்றீங்க. சிலை வைக்கிறதுக்கு மட்டும் எங்கயிருந்து சார் காசு வருது. முதல்ல மக்களுக்கு அந்த சோறுக்கு வழி பாருங்க சார்.. சிலை வெக்கிற பத்தி அப்புறமா யோசிக்கலாம். கேஸ் சிலிண்டருக்கு மானியமா, நூறு ரூபாய் தர்ரேன்னு சொன்னீங்களே என்னாச்சு? கரும்புக்கு ஆதார விலையா 4 ஆயிரம் ரூபா தர்ரேன்னு சொன்னீங்களே என்னாச்சு? ரொம்ப நாள் கல்யாணமே ஆகாம இருக்கிற பெண்களுக்கு அவங்களோட கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை கொடுப்போம்னு சொன்னீங்களே என்னாச்சு? இதெல்லாம் வெறும் சாம்பிள்தான்!
இதவிட ஹைலைட் ஒன்னு இருக்கு, மாநில அரசால முடியவே முடியாதுன்னு தெரிஞ்சும், நாங்க வந்தா நீட்ட ஒழிப்போம்…. ஆஹா, ஆஹா…. ஆஹா… எவ்ளோ பெரிய மோசடி இது. கேட்டா நாங்கதான் முன்மாதிரி ஆட்சின்னு சொல்வாங்க. மோசமான மோசடி ஆட்சி…. மோசமானவங்கள்லயே முக்கியமானவங்க கேள்விபட்டிருக்கீங்களா… அந்த மாதிரி மோசடி ஆட்சிலயே முக்கியமான ஆட்சி இந்த தி.மு.க ஆட்சி,
மக்களே மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? இந்த விஜய நம்புறீங்களா? ஸ்டாலின் சார நம்புறீங்களா? இந்த சத்தத்துக்கு அர்த்தம் தெரியுமா சார்…
“ஸ்டாலின் தொடரட்டும் அப்டினு அர்த்தம் கிடையாது; தீய சக்தி தி.மு.க ஆட்சி மறையட்டும்; தூய சக்தி டி.வி.கே ஆட்சி வரட்டும்…” நானும் ‘உதிக்கட்டும்’னு சொல்லலாம்னு நினைச்சேன்… பார்த்தா, அத வேற திரிச்சு பேச ஆரம்பிச்சுருவாங்க.
திருநெல்வேலில நாங்குநேரில… இப்போ ரீசன்ண்டா… ஒரே லைன்ல சொல்லனும்னா, நம்ம நண்பர் ஒருத்தர் ட்வீட் போட்ருந்தாரு. அதையே சொல்றேன். ‘ஸ்டாலின் தொடரட்டும்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்…’ இதுதான் அந்தப் பிரச்சினைக்கு ஒரே லைன்.
மக்களே! காஞ்சிபுரத்துல, வேலூர்ல எல்லாம் நம்ம விஷன பத்தி சொன்னோம் இல்லையா? அதேமாதிரி இங்கயும் சில விஷன்ஸ சொல்லனும். இது மத்தவங்கள மாதிரி தேர்தல் வாக்குறுதின்னு சொல்லி ஏமாத்துறது கிடையாது. நம்பள நம்புற மக்களுக்கு நம்பிக்கை தர்ரது; நம்ம ஆட்சிக்கு வந்ததும், இதெல்லாம் செய்ய நடவடிக்கை எடுப்போம்னு சொல்றது; டெல்டா விவசாயிகள் எல்லாம் சமீபத்துல உரத் தட்டுப்பாட்ட சந்திச்சுங்கள்ல… சில பேர் உரத்த பதுக்கி வெச்சு அதிக விலைக்கு வித்ததா நியூஸ்லாம் கூட வந்துச்சு. நம்ம டி.வி.கே ஆட்சிக்கு வந்ததும், உரத்தட்டுப்பாடு இல்லாம பாத்துக்குவோம். 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகளில், வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் 50 சதவிகிதம் வரை ரத்து செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.
தி.மு.க மாதிரி எல்லாருக்கும்னு சொல்லிட்டு, அதுல தகுதி பிக்ஸ் பண்ணி, பாகுபாடு காட்டி ஏமாற்றமாட்டோம். எல்லாத்தையும் வெளிப்படையாகச் சொல்லுவோம். இரண்டு ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியராக இல்லாதபட்சத்தில், அவர்களின் குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்துவகை படிப்புகளுக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும். விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக, எந்தத் திட்டமாக இருந்தாலும், ஒன்றிய அரசின் நெருக்கடியே இருந்தாலும், அந்த திட்டத்தை உங்களுடைய டி.வி.கே ஆட்சி முழுமையாக நிராகரிக்கும்.
எப்போதும் விவசாயிகளின் பக்கமே, நம்ம ஆட்சி நிக்கும்.
கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் மூட்டைகள் முறையாக பாதுகாக்கப்படும்.
நெல் முளைத்து வீணாவதை பார்த்துக் கொண்டு நமது அரசு சும்மா இருக்காது; போதுமான கொள்முதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல, கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்வதற்கோ, மூட்டை ஏற்றி-இறக்கவோ, ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும். அப்படிக் கமிஷன் வாங்குவது யாராக, இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்கு பெண் எடையாளர். ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும்.
ரேசன் கடைகளில் அரிசி தவிர அனைத்துப் பொருட்களும் பாக்கெட் செய்து விநியோகம் செய்யப்படும்.
மீனவர்களுக்கு ஒன்றிய அரசு சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உண்மையான – உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு நமது டி.வி.கே அரசு கொடுக்கும்.
நான் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்றேன். கல்வி, மருத்துவம், ரேசன், குடிநீர், சாலைவசதி, பஸ் வசதி இதுமாதிரி அடிப்படை விஷயங்களுக்குத்தான் நமது அரசு முதல்ல முக்கியத்துவம் கொடுக்கும்.
எனக்கு நம்மளோட குழந்தைகள், நம்ம பெண்கள், நம்ம இளைஞர்கள் லைப்க்கு முன்னுரிமை கொடுக்கனும். அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமில்லாம, தனியார் வேலை வாய்ப்புகளுக்கான வழியையும் உத்தரவாதத்தையும் உருவாக்கனும். அப்படி நாம உருவாக்கிட்டாலே, அவங்களுக்கான ரூட்ட நம்ம இளைஞர்கள் அவங்களே தேர்ந்தெடுத்துப்பாங்க. இத்தனை கோடி… அத்தனை கோடி ஒப்பந்தம்னு சொல்லி விளம்பரம் மட்டும் செய்யாம, உண்மையான ஒப்பந்தம் போட்டு வெள்ளையறிக்கை வெளியிட்டு அத செயல்படுத்துனாலே போதும்… எல்லாம் தன்னாலே நடக்கும்.
இங்கே இன்னொன்னையும் சொல்ல நினைக்கிறேன். இங்கே “அடுத்து நாங்கதான்… நாங்கதான்னு நெஞ்ச நிமிர்த்தி கூவுற யாராச்சும்… நாங்க ஊழலே செய்யாதவங்கன்னும், ஊழல் செய்யவேமாட்டோம்னும் நெஞ்ச தொட்டு மனசாட்சியோட சொல்ல முடியுமா? ஆனா, நாம இன்னிக்கில்ல, ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறமும், ஓப்பனா, தில்லா கட்ஸா சொல்லுவோம்… ஊழல், லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சிய கொடுக்க உண்மையா டிரை பண்ணாலே போதும், எல்லாம் தன்னாலே நல்லா நடக்கும்.
எல்லாரும் கொஞ்சம் கை இப்டி வையுங்களேன்…
எங்க ஓட்டு… எங்க உரிமை…
எங்கள யாரும் விலைக்கு வாங்க முடியாது.
எங்க ஓட்டு விசில் சின்னத்துக்குத்தான்…
யாரையும் நம்பி ஏமாறமாட்டோம்..
எங்கள் வார்த்தையில் இருந்து மாறமாட்டோம்…
இது நிஜம்…
தேங்க்யூ…
என் நெஞ்சில் குடியிருக்கும் தஞ்சை மக்களே… என் நெஞ்சில் குடியிருக்கும் வேலூர் மக்களே… வேலூர்ல இத நான் சொல்ல மறந்துட்டேன்… Sorry, உங்களுக்காக இங்க நான் சொல்றேன்… உங்களோட நான் இருக்கேன்… நம்பளோட நம்ம மக்கள் இருக்கிறாங்க… இதுக்கு மேல என்ன வேணும்…
கான்பிடன்ட்டா இருங்க…. வெற்றி நிச்சியம்… மீண்டும் சந்திக்கும் வரை…
நன்றி! வணக்கம்…