சிம்பு படம் வெற்றிமாறன் விளக்கம்
வெற்றிமாறன் அடுத்ததாக சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் வடசென்னை கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படம் வடசென்னை படத்தின் 2ம் பாகம் என செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் வீடியோ மூலம் விளக்கம் அதில்,‘வாடிவாசல்’ படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பாதுகாப்பு, தொழில்நுட்ப விஷயங்கள் தொடர்பாக படம் துவங்குவதில் காலதாமதம் ஆகிறது.இடைப்பட்ட நேரத்தில் வேறு ஒரு படம் பண்ணுவோமே என நினைத்து அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்குகிறேன். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படம் வடசென்னை-2 அல்ல. வடசென்னை
பின்னணியில் முந்தைய கேரக்டர்களுடன்
தொடர்புடையதாக இருக்கும். படத்திற்கு
வடசென்னை படத்தின்தயாரிப்பாளர் தனுஷ் ஒப்புதல் அளித்துள்ளார். தனுசிடம் இதுபற்றி சொன்ன போது ‘நீங்கள் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும். சிம்புவுக்கு இந்த படம் புது அனுபவமாக இருக்கும்’ என சொன்னார். அதே போல் சிம்புவும், படத்தினால் தனுஷ் ‘டிஸ்டர்ப்’
ஆகிட கூடாது என சொன்னார். பணம் வாங்காமல் படத்தின் கருவை எடுக்க தனுஷ் ஒப்புதல் கொடுத்தார் என கூறினார்.