அஜித்-64 படத்தை தயாரிக்கும் ஷாலினி

அஜித்-64 படத்தை தயாரிக்கும் ஷாலினி
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜித் குமார் எடுக்க உள்ளார். ஏகே – 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் படத்தை யார் தயாரிக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. அஜித் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்டதால் எந்த தயாரிப்பாளர்களும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என சிலர் கருத்தும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி ஏகே – 64 படத்தின் மூலம் தயாரிப்பாளராகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதோடு ஷாலினியே முன்னின்று படப்பிடிப்பு பணிகளையும் கவனிக்க இருக்கிறார்.

Comments (0)
Add Comment