ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு சேவைக் கட்டணம்!

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு சேவைக் கட்டணம்!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார்.

சர்வதேசக் கடல்சார் சட்டங்களின்படி, போக்குவரத்துச் சுங்கக் கட்டணம் (Transit Tolls) விதிக்க இயலாது. இருப்பினும், வழிகாட்டுதல், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்களை வசூலிக்க முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சேவைக் கட்டணங்கள் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் விரைவில் ஓமன் நாட்டுடன் இணைந்து வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை தொடர்பான இந்த அறிவிப்பு, சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் வர்த்தக துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Comments (0)
Add Comment