செப்டம்பர் 11ல் டிமான்டி காலனி 3
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்டி காலனி 3’ திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2015-ல் வெளியான ‘டிமான்டி காலனி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி அதுவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து உருவாக்கி இருக்கிறார். ஹாரர் த்ரில்லர் படமான இதில் பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.