பிறந்தநாளில் கனவுத் திட்டத்தை அறிவித்த சாக்ஷி அகர்வால்!

பிறந்தநாளில் கனவுத் திட்டத்தை அறிவித்த சாக்ஷி அகர்வால்!
‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட படங்களிலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது தொழில்முனை வோராக தனது புதிய பயணத்தைத் தொடங் கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த 11 மாதங்களில் மட்டும் 551 முறை தயாரிப்பு கலவையில் மாற்றங்களைச் செய்து,தனது எதிர்பார்ப்பு க்கு ஏற்ப தயாரிப்பை உருவாக்கியுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான ‘OKUU’-வை அதிகாரப்பூர் வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் நடிகையாகவும் தொழில்முனைவோராகவும் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர உள்ளார்.

Comments (0)
Add Comment