சிவகார்த்திகேயன் இடத்தில் ரியோ ராஜ்

சிவகார்த்திகேயன் இடத்தில் ரியோ ராஜ்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய ஜாலியான கமர்சியல் படங்களை இயக்கிய பொன்ராம், அதன் பிறகு இயக்கிய சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி மற்றும் கொம்பு சீவி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தனது முதல் சக்சஸ் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இரண்டாம் பாகத்திற்கு தற்போது கதை எழுதி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக ரியோ ராஜ் நடிக்க உள்ளார். அதோடு தனது தயாரிப்பு நிறுவனமான ரிவா ரூட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் அவரே தயாரிக்க உள்ளார்.

Comments (0)
Add Comment