கம்பேக் கொடுக்கும் ரம்பா
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் விலகி இருந்தார். இந்நிலையில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் ரம்பா மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார். பன்முகத் திறமை கொண்ட ரம்பா தற்போது நடிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.