பாலிவுட் குறித்து ரகுல் பிரீத் சிங்….

பாலிவுட் குறித்து ரகுல் பிரீத் சிங்….
தமிழ்,தெலுங்கு,இந்தி திரைஉலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். சமீப காலமாக பாலிவுட் திரை உலகில் நிலவி வரும் எதிர்மறையான மனப்பான்மை குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது, மும்பையில் யாரும் மற்றவர்களின் படங்களை ஆதரிப்பதில்லை.இதற்குக் காரணம் பொறாமை தான். ஒருவரின் படத்தை தோற்கடிப்பதற்காக எதிர்மறை யான விமர்சனங்களை உருவாக்குவது இங்கு சர்வ சாதாரணமாக உள்ளது. தென்னிந்திய திரை உலகைப் போல பாலிவுட்டிலும் எதிர்மறையான விளம்பரங்களை ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றிணைந்து செயல்பட்டால் நமது இந்திய திரைஉலகம் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும். தென்னிந்திய திரையு லகில் ஒரு படம் வெற்றி பெறும் போது அனைவரும் ஒன்றாக கொண்டாடுகிறார் கள். இது போன்ற ஒரு ஆரோக்கியமான சூழல் அங்கு நிலவுகிறது என்றார்

Comments (0)
Add Comment