பிரபு, விஜய் வர்மா நடிக்கும் புதிய படம்
‘ ரைட்டர்’ பட இயக்குநரும் டிசி படத்தின் எழுத்தாளருமான பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், நடிகர் பிரபு மற்றும் பிக்பாஸ் பிரபலம் விஜய் வர்மா ஆகியோர் நடிக்கும் புதிய படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் மற்றும் அவிஏட் பிச்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். சென்னையில் நடந்த இந்தப் படத்தில் பூஜையில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவின ரை வாழ்த்தினர்.டார்க் ஹியூமர் ஜானரில், உருவாகவுள்ள இதில் ராகுல் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.இவர்களுடன் முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.