மொத ராத்திரி பட நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்
சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தேவி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை பானுப்பிரியா. சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவு கண்டவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி வந்தது என்பது குறித்து அவர் கூறியது,, “பக்ருதீன் சார் மூலமாக ‘கூழாங்கல்‘ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் கரியரில் அடுத்த நிலைக்கு போகும் வாய்ப்பாக ‘தாய் கிழவி’ படம் அமைந்தது. இப்போது ‘மொத ராத்திரி’ படத்தில் பக்ஸ் மனைவி தேவி கதாபாத்திரத்தில் நடித்தது. பலரிடம் பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. அடுத்து வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ அதில் கிஷோர் மனைவியாக நடித்து வருகிறேன். மேலும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட் ,இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி- தனுஷின் ‘ஓம்’ திரைப்படம், இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் ஒரு படம் என நடித்து வருகிறேன் என்கிறார்.