பவளமல்லி, முட்டை கலக்கி பாடல் புதிய சாதனை
இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, ஆல்பங்களுக்கும் இசையமைத்து பாடி நடனமாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரின் ஆல்பம் பாடல் ஆன பவளமல்லி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த பாடலில் சாய் அபயங்கருடன் கயாடு லோக்கரும் சேர்ந்து நடனமாடி இருந்தார் . இவர்கள் இருவரின் காமினேஷனில் அந்த பாடல் செம ஹிட் ஆனது . இதனால் குறுகிய காலத்தில் 100 மில்லியன்களை கடந்தது .தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இப்பாடல் பிரபலமானதன் காரணத்தால் 250 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று புதிய சாதனைபடைத் துள்ளது.அதேபோல் நடிகர் கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படத்தில் இடம்பெற்ற முட்ட கலக்கி பாடலும் ஃபேவரிட் சாங்காக மாறியது. இதனால் இப்பாடலும் குறுகிய காலத்தில் 100 மில்லியனை கடந்தது தொடர்ந்து இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது 250 மில்லியன் பார்வைகளைப் பெற்று இதுவும் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.