ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 கூடி புதிய உச்சம்!
ஒரு சவரன் – 1,24,880
ஒரு கிராம் – 15,610
சவரனுக்கு ரூ.2,960 கூடிய நிலையில், தற்போது மேலும் ரூ.2,240 கூடியது.
நிலக்கடலை விலை உயர்வால் கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையை 40% உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ.8000ல் இருந்து ரூ.14,500 ஆக உயர்வு; இதனால் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.180ல் இருந்து இனி ரூ.220க்கு மொத்த விலைக்கு விற்கப்படும் என தெரிவிப்பு
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஒரு வாரத்தில் இறைச்சி உணவு வகைகள் மெனுவில் சேர்க்கப்படும் என கிழக்கு ரயில்வே தகவல்
மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்து அசாமின் காமக்யா ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட்டுவருகிறது
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் 230 நாட்களுக்குப் பிறகு இன்று மாலையுடன் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
தற்போது விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படும் நிலையில் பாசனக் காலம் முடிந்ததால் நிறுத்தப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 92.91 அடியாகவும், நீர் இருப்பு 56.04 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
சென்னை அடையாறு அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 5 பேர் கைது
கைதான அனைவரும் புலம் பெயர் தொழிலாளர்கள் என தனிப்படை போலீசார் தகவல்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் பிரச்னையை தீர்க்க முன்னாள் நீதிபதி எஸ்.கே.கவுலை நடுவராக நியமித்தது உச்ச நீதிமன்றம்
ராமானுஜரின் சீடர்களிடையே இந்த பிரச்னை மத மோதலாக உருவாவதை அனுமதிக்கக் கூடாது என தலைமை நீதிபதி அமர்வு கருத்து
திருக்கோயில்களின் நகரமாக புகழப்படும் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்; கும்பகோணம் மகாமக விழாவுக்கான பணிகளை இப்போதே திட்டமிட்டு ஆவண செய்ய வேண்டும்
கும்பகோணம் அருகே நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநாட்டில் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்
INDvNZ Toss Update
4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் WhatsApp-ல் விரைவில் கட்டணம்
WhatsApp-ல் வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக ஸ்டேட்டஸ்களுக்கு நடுவே தற்போது விளம்பரங்கள் தோன்றி வருகின்றன
இதனை தொடர்ந்து தற்போது விளம்பரம் இல்லா சேவையை பெறுவதற்காக WhatsApp-ல் விரைவில் கட்டணம் கொண்டு வரும் முடிவால் பயனர்கள் அதிர்ச்சி