முதற்கனல் சினிமா விமர்சனம்

முதற்கனல் சினிமா விமர்சனம்
டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வருகிறார் அஸ்வின் விஸ்வநாதன்.ஒரு நாள் தனது தந்தை ராமசாமியுடன் சொந்த கிராமத்திற்குச் செல்லும் அவர்,அங்கு புகைப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேசுடன் நட்பு ஏற்பட்டு அவரும் போதைக்கு அடிமையாகி விடுகிறார். இந்த நிலையில் ஒரு இளம் பெண் கொலை வழக்கில் அஸ்வினும் அவரது நண்பர்களும் சிக்கிக் கொள்ள, அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது படத்தின் மீதி கதை. போதைப் பொருளை பயன்படுத்துபவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, அதனை சமூகத்தில் பரப்புபவர்களே உண்மையான குற்றவாளிகள் என்ற கருத்தை மையமாக வைத்து இயக்குநர் ஆர். வெங்கட்ரமணன் இயக்கியுள்ளார். இருப்பினும் சில காட்சிகள் நாடகத்தன மாக இருப்பது பெரிய மைனஸ்.டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருந்து போதையின் இருளுக்குள் சிக்கித்தவிக்கும் இளைஞனாக அஸ்வின் விஸ்வநாதன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளார்.மகனின் எதிர்காலம் சிதைவதை பார்த்து வேதனையில் துடிக்கும் தந்தையாக ராமசாமி அளவான நடிப்பால் மனதில் நிற்கிறார்.ஹரிகரன், யாேகேஷ்,இலக்கியா, தனுஜா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.மீரா லாலின் இசை, கந்தசாமி கோபாலின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

Comments (0)
Add Comment