அஜித்க்கு அழைப்பு விடுத்த மன்சூரலிகான்

அஜித்க்கு அழைப்பு விடுத்த மன்சூரலிகான்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமாருக்கு, நடிகர் மன்சூர் அலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தங்களை அடையாளம் கண்டது சினிமா. கோடிக்கணக்கான ரசிகர்கள் உங்கள் நடிப்பில் உருவானதற்கு காரணம் சினிமா.விஜய் அவர்கள் முதலமைச்சர் ஆகிவிட்டார். நீங்கள் ரேஸ் ரேஸ் என்று மிகவும் ரிஸ்க் ஆன, உயிரைப் பணயம் வைக்கும், கார் ரேஸ் தான் பேஷன் என்று உள்ளீர்கள். தயவு செய்து லட்சக்கணக்காண தொழிலாளர்களுக்கு வாழ்க்கை தரும் திரைத்துறையை கருத்தில் கொண்டு, ரசிகர்களையும் மகிழ்சிப்படுத்த, 10 தயாரிப்பாளர்களை சேர்ந்து தயாரிக்க வைத்து, உன்னத லட்சியத்திற்காக நடிக்க வாருங்கள் என்று இரு கரம் கூப்பி, இரு கரம் நீட்டி வரவேற்கிறேன் என அவர் கூறியுள்ளார்

Comments (0)
Add Comment