‘ கார்கில்’ பட இயக்குநரின் அடுத்த படம் :
கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் எம். கார்த்திகேசன், ஜீன் வில்லியம்ஸ், சாரிஷ், ஏபல், அகன் மற்றும் ஆனந்த வர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவை கோலஞ்சி குமார் கவனிக்க, இசையை ஜோஸ் பிராங்க்ளின் அமைக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகி வரும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.