ஏ.ஐ. மூலம் மீண்டும் நடிக்கும் கே. பாக்யராஜ்

ஏ.ஐ. மூலம் மீண்டும் நடிக்கும் கே. பாக்யராஜ்
மறைந்த இயக்குனர் கே.பாக்யராஜ் நடித்த கடைசி படங்களில் ஒன்று கன்னடத்து பைங்கிளி. அதில் அவர் ஜோடியாக நடித்து இருப்பவர் அவரின் மனைவி பூர்ணிமா. இது குறித்து படத்தின் இயக்குனர் சாய்ரமணி கூறியது, ‛‛ “கன்னடத்து பைங்கிளி”படத்தில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். பாக்யராஜும், டி.ராஜேந்தரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இதுவாகும்.இந்த படத்தில் தனது பகுதிகள் அனைத்தையும் பாக்யராஜ் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இப்படத்தை நன்றாகப் புரொமோட் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இன்னும் சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டிய நிலையில் அவர் நம்மை விட்டு சென்றுவிட்டார். எனவே, அந்தக் காட்சிகளை ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் உருவாக்க உள்ளோம்.35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமாவும் இணைந்து நடித்த படமும் இதுதான். அதுவும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.

Comments (0)
Add Comment