ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ரிலீஸ் அப்டேட்
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” படம் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் என, படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை 31ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜய் நடித்த “ஜனநாயகன்” படம் ஜூலை 23ல் ரிலீஸ் ஆனதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பண்டிகை காலம் என்பதால் வரிசையாக பெரிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருவதால் சிக்மா படத்தை அக்டோபர் 2ல் வெளியிட முடிவு செய்துள்ளனர்.