“நடந்திருந்தால் மிகப்பெரிய தவறு” – அமைச்சர் ராஜ்மோகன்
சென்னையில் உள்ள அரசு பள்ளியில் 11 வயது மாணவியை மாதவிடாய் காரணமாக பள்ளி முடியும் வரை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக ஆசிரியர் மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்கள் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். “மாணவியை மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த சம்பவம் உண்மையில் நடந்திருந்தால், அது மிகப்பெரிய தவறு. இது தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் உறுதியளித்துள்ளார். மாணவர்களின் கண்ணியம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், உண்மை நிலை குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பரபரப்பு குற்றச்சாட்டு 11 வயது மாணவி பாதிக்கப்பட்டதாக தகவல் விசாரணை அறிக்கை கோரிய அமைச்சர் ராஜ்மோகன் தவறு உறுதியானால் நடவடிக்கை என உறுதி.