பெண் என்றால் கவர்ச்சி மட்டும் தானா?ஹூமாகுரேஷி ஆதங்கம்!!
ரஜினி நடித்த ‘காலா’, அஜித் நடித்த ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை ஹூமாகுரேஷி. இந்நிலையில் அவர் காது கேட்காத மற்றும் வாய் கேட்காத கொலையா ளியாக நடித்த ‘பேபி டூ டை டூ’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை ஒட்டி அவர் அளித்த பேட்டியில், ஒரு பெண் திறமையானவர் என்பதை காட்டுவதற்கு அவரை கவர்ச்சி பொருளாக சித்தரிக்க வேண்டிய அவசிய மில்லை.இயல்பாக இருக்கும் பெண்களை யும் சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களாக உருவாக்க முடியும் என்றார்.