ஐ நோபடி
பிரித்விராஜ் தனது மனைவி பார்வதி திருவோத்து மற்றும் 2 மகள்களுடன் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்கிறார். ஒரு நாள் வங்கியில் நடந்த எதிர்பாராத கொள்ளை சம்பவம் அவரது வாழ்க்கையை யே தலைகீழாக மாற்றுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதி கதை. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்திருந்தாலும், அதில் சிக்கிக் கொள்ளும் ஒரு சாதாரண குடும்பஸ்தனின் வாழ்க்கையை மையப்படுத்தி வித்தியாசமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நிஷாம் பஷீர். இருப்பினும் ஒரு மலையாள படம் பார்த்த ஃபீல் வருகிறது. பிரித்விராஜ் வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல், பயம், பதற்றம், இயலாமை ஆகிய உணர்வுகளை உடல்மொழியால் மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். பார்வதி திருவோத்து உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார். எதிர்மறை கதாபாத்திரத்தில் ஹக்கீம் ஷாஜகானும் மிரட்டல் நடிப்பை தந்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு கை கொடுத்துள்ளது.