ஹைதராபாத்தில் 4-ம் தேதி பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படி யும்,மாலையில் கொடவா முறைப்படியும் நடந்தது. இந்த திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது. புது
மண ஜோடிகளின் ஆடை அணி கலன்கள் குறித்து பலரும் பாராட்டிய வருகின்றனர்.வரும் மார்ச் 4-ந் தேதி இவர்களின் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு இந்திய திரையுல கினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருந்தினர்களுக்கு விதவிதமான சைவ, அசைவ பிரமாண்ட விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண வரவேற்பு விழாவை விஜய்தேவர கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.