பொதுவான செய்திகள்

“மூலப்பொருட்கள் விலை உயர்வால் கறிக்கோழி பண்ணையில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு.

கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்குகூலி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” -சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் பேட்டி

 

வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு

சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ் 18 புதிய சேவைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

இந்தியாவில் `One Plus’?

`One Plus’ நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை நிறுத்தப் போவதாக இணையத்தில் பரவிய தகவலுக்கு One Plus நிறுவனம் சார்பில் திட்டவட்ட மறுப்பு

“நாங்கள் வழக்கம் போல் இந்தியாவில் செயல்படுகிறோம், செயல்படுவோம்”

-One Plus இந்தியா CEO X தளத்தில் பதிவு.

 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Comments (0)
Add Comment