இனி பெண்களுக்கு டென்ஷனே இல்லை… ஆண்களுக்கும் வந்தாச்சு கருத்தடை மாத்திரை!

இனி பெண்களுக்கு டென்ஷனே இல்லை… ஆண்களுக்கும் வந்தாச்சு கருத்தடை மாத்திரை!

பெண்கள் மட்டுமே கருத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என நிலை மாறும் வகையில், விரைவில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை வர இருக்கிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

குடும்ப அமைப்பில் சமூக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் ஆண்களை விட பெண்களுக்கே அழுத்தமும், பொறுப்புகளும் அதிகமாக இருக்கும். வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வது, குழந்தைகளை வளர்த்தெடுப்பது, சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுதல் உள்ளிட்ட பல பொறுப்புகளை பெண்கள் மீது சமூக திணிக்கிறது எனலாம்.

அதுமட்டுமின்றி, கருத்தடை உள்ளிட்ட பல விஷயங்களிலும் பெண்களே அழுத்தம் உள்ளது. இதற்காக பெண்களே கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வார்கள். ஆனால் தற்போது இந்த நிலையை மாற்ற மருத்துவ ரீதியான தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. YCT-529 என்ற ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை, மனிதனுக்கான முதல் மருத்துவ சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.

YCT-529 என்ற கருத்தடை மாத்திரைகளில் எந்தவிதமான ஹார்மோன்களும் இல்லை. இவை ஏற்கெனவே விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் நேர்மறையான ரிசல்ட்களே வந்துள்ளன. எலிகளிடம் பரிசோதிக்கப்பட்டதில் இந்த கருத்தடை மாத்திரைகள் 99% கருத்தரிப்பை தடுத்துள்ளது. இது சோதனையே என்றாலும் ஆரம்பக்கட்ட ஆய்வை பொருத்தவரை இது முன்னேற்றமாகவே கருதப்படுகிறது.

வருங்காலத்தில் இது ஆண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனளிக்கும் கருத்தடை மாத்திரையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மினசோட்டா பல்கலைக்கழக மருந்தியல் கல்லூரி மற்றும் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான யுவர்சாய்ஸ் தெரபியூடிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த கருத்தடை YCT-529 உருவாக்கப்படுகிறது.

ஹார்மோன் இல்லாத YCT-529 என்ற இந்த கருத்தடை மாத்திரை, விந்தணுக்களுக்குள் உள்ள வைட்டமின் A அணுகலைத் தடுக்கும். இதனால் விந்து உற்பத்தியாகாமல் தடுக்கப்படுகிறது. குறிப்பாக இந்த மாத்திரை ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பாதிக்காது. அதேநேரத்தில், ஆண்களின் பாலியல் மனநிலையிலும் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது.

ஆராய்ச்சியாளர்கள், YCT-529 கருத்தடை மாத்திரைகளை 16 ஆண்களிடம், வெவ்வேறு அளவுகளில் கொடுத்து பரிசோதித்து பார்த்தது. ஆனால், இந்த பரிசோதனை கருத்தடைக்கு பயனளிக்கிறதா என்பதற்காக செய்யப்படவில்லை. இந்த மாத்திரைகள் மனிதர்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை அறியவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து 16 ஆண்களும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த மாத்திரை 2030ஆம் ஆண்டுக்குள் மனிதர்களின் பயன்பாட்டுக்கு வரலாம் என வல்லுநர்கள் கூறப்படுகிறது. இந்த மாத்திரை மட்டுமே மனிதர்களிடம் சோதிக்கப்பட்ட கருத்தடை மாத்திரையாகும்.

பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 16 ஆண்களிடமும் எவ்வித பக்கவிளைவுகளும் வெளிப்படவில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இதய துடிப்பு, ஹார்மோன் செயல்பாடு, மனநிலை, பாலியல் செயல்பாடு, உடல் வீக்கம் என எவ்விதத்திலும் பிரச்னை உண்டாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்தகட்டமாக, மனிதர்களின் விந்தணு உற்பத்தியை தடுப்பதில் இந்த மாத்திரை எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பதை பரிசோதிப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தற்சமயம், ஆண்களுக்கான குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு ஆப்ஷன்கள் என்றால் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ஆணுறைகள் ஆகியவை மட்டுமே.

Comments (0)
Add Comment