விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட்வெயிட் பேபி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
ஹிதா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள லைட்வெயிட், பேபி படத்தில் ஸ்டாண்ட்
-அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக ஃபிட்னஸ் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பிரமோத் கொட்டியன் ஒளிப்பதிவு செய்ய, சரவணா சுப்ரமணியம் இசையமை த்துள்ளார். கதை திரைக்கதை எழுதி கே.சி. குரு இயக்கி உள்ளார். நகைச்சுவை ததும்ப வசனத்தை விக்கல்ஸ் விக்ரமே எழுதியுள்ளார். ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ஒரு ஃபிட்னஸ் பிரபலமும் இணையும் இந்த வித்தியாசமான கூட்டணி, படத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைகிறது. ஃபிட்னஸ் உலகை பின்னணியாகக் கொண்டிருந்தாலு ம், வெவ்வேறு உலகங்களில் இருந்து வரும் இரு நபர்களின் உறவை, காதல், காமெடி, குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட லட்சியங்களுடன் இணைத்து இப்படம் சொல்லவுள்ளது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.