மீண்டும் மிரட்ட வரும் ஈவிள் டெட் பர்ன்

மீண்டும் மிரட்ட வரும் ஈவிள் டெட் பர்ன்
புகழ்பெற்ற திகில் த்ரில்லர் தொடர் படமான ‘ஈவிள் டெட்’ டை உருவாக்கியவர் சாம் ரெய்மி. தீய சக்திகளால் அவிழ்க்கப்பட்ட பேய் சக்திகளுக்கு எதிராக முக்கிய கதாபாத்திரங்கள் நடத்திய போராட்டமே இதன் முக்கிய கதைக்களம்.ஈவிள் டெட், ஈவிள் டெட் 2 , ஆர்மி ஆஃப் டார்க்னெஸ் ஆகிய மூன்று படங்கள் தொடர்ச்சியாக வெளியான ரீபூட் படமாகும்.அதோடு தொடரைத் தொடர முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்படம் மீது ரசிகர்கள் காட்டிய ஆர்வத்தால் 2023ல் ஈவிள் டெட் ரைஸ் படம் வெளியானது. தற்போது ஈவிள் டெட் பர்ன் என்ற பெயரில் உருவாகியுள்ளது.இதுவரை காணாத மிகவும் பயங்கரமான திகில் பயணமாகக் கருதப்படும் இப்படத்தை இயக்குநர் செபாஸ்டியன் வானி செக் இயக்கியுள்ளார். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Comments (0)
Add Comment