குழந்தை விற்பனை விவகாரம்..! 13 பேர் கைது

குழந்தை விற்பனை விவகாரம்..! 13 பேர் கைது

டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய குழந்தை விற்பனை கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏழ்மை நிலையில் இருந்த பெற்றோரிடம் இருந்து வெறும் ரூ.10,000-க்கு குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ரூ.10 லட்சம் வரை விற்று வந்ததாகக் கூறப்படும் மோசடி கும்பலின் செயல்பாடுகள் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

போலி பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 30 குழந்தைகளை சட்டவிரோதமாக விற்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தைகளை பொருளாக கருதி விற்பனை செய்த இந்த மனிதநேயமற்ற செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத தத்தெடுப்பு தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Comments (0)
Add Comment