சென்னையின் சாம்பியன்கள் விருது வழங்கும் விழா

சென்னையின் சாம்பியன்கள் விருது வழங்கும் விழா

சென்னை ஆக, 24:
எஸ்.ஏ. அறக்கட்டளை சார்பில் சென்னையின் சாம்பியன்கள் என்ற பெயரில் விருது வழங்கு விழா மயிலாப்பூரில் நடைபெற்றது.

லாப நோக்கமற்ற நிறுவனமான கே.எஸ்.ஏ. அறக்கட்டளையினர் கடந்த 12 ஆண்டுகளாக சென்னை மாநகரத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்த குடிமக்களை கௌரவிக்கும் நோக்கத்துடன் கலை, கலாசாரம், கல்வி, தொழில், சுகாதாரம், அறிவியல், சமூக முன்னெடுப்பு, மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பு செய்த சென்னைவாசிகளைத் தேர்ந்தெடுத்து சென்னையின் சாம்பியன்கள் என்ற விருதளித்து கௌரவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஏழு சென்னைவாசிகள் மற்றும் அமைப்புகள் இந்த விருதினைப் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக ஓய்வு பெற்ற தென் இந்தியா பிராந்தியத்தின் முன்னாள் ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் எம். இந்திரபாலன் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்த விழாவில் கே.எஸ்.ஏ. அறக்கட்டளையின் அறங்காவலர் டி.ஆர். கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.விருது பெற்றவர்களுக்கு சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கோப்பையும், பாராட்டிதழும் வழங்கப்பட்டன. முடிவில்அறக்கட்டளையின் அறங்காவலர் திரு. கே. கல்யாணராமன் நன்றியுரை வழங்கினார்.

Comments (0)
Add Comment