கோலிவுட்டின் பிசியான அம்மா, லிசி ஆண்டனி.…!!

கோலிவுட்டின் பிசியான அம்மா, லிசி ஆண்டனி.…!!
தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரா உடனே கூப்பிடுங்க லிசி ஆண்டனியை என்று சொல்லும் அளவுக்கு பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த 3-ந் தேதி வெளியான ‘கட்டா குஸ்தி-2’. படத்தில் கருணாஸ் மனைவியாக லிசி ஆண்டனி நடித்திருந்தார். முதல் பாகத்தில் அமைதியாகவும், இரண்டாம் பாகத்தில் அதிரடியான பஞ்சாயத்து தலைவராகவும் அசத்தலான் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவருடைய நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், தனது திரை வாழ்க்கை குறித்து நடிகை லிசி ஆண்டனி கூறியது, ‘கட்டா குஸ்தி-2’ படத்தில் நான் நடித்த கேரக்டருக்கு இவ்வளவு பெரிய வரவேற்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அதேபோல் இந்த வாரம் ரிலீஸ் ஆகி உள்ள லட்சுமி காந்தன் கொலை வழக்கு படத்தில் வெற்றிக்கு அம்மாவாக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளேன். நான் நடித்த ஸ்டெல்லா மிஸ், குளோரி போன்ற கதாபாத்திரங்கள் மக்களிடையே நல்ல முறையில் போய் சேர்ந்தது. அதேபோல் தரமணி ப்ளூ ஸ்டார் போன்ற படங்களில் நான் நடித்த கேரக்டர் ரொம்பவும் நான் விரும்பி நடித்தது. அடுத்ததாக நெட்பிலிக்ஸில் வெட்டுவம் என்ற ஒரு வெப் தொடரில் நடித்துள்ளேன். இது தவிர பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு புதிய படம், விஜய் ஆண்டனியுடன் அப்பா குட்டி படம், அடுத்தது ஏலியன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். எனக்கு நிறைய விருது வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எனக்கு இதுவரை எந்த விருதும் கிடைக்காமல் இருப்பது சற்று வருத்தம் தான். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். பிரதீப் ரங்கநாதனுடன் நான் நடிக்க உள்ள படம் எனது 75-வது படம்.‘கார்க்கியின் தாய்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் மட்டுமே இதுவரை நடித்துள்ளேன். மற்ற மொழி படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பின். எதிர்காலத்தில் இயக்குனராகும் எண்ணமும் இருக்கிறது. கட்டா குஸ்தி போன்று கதாபாத்திரங்கள் வந்தால் முன்னுரிமை கொடுத்து நடிப்பேன். எப்போதும் பெண்கள் திறமையானவர்கள், ரொம்ப ஸ்ட்ராங்கான வர்கள் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஜொலிப்பார்கள் என்றார்.

ஷிப்பிங் முதல் சினிமா வரை….
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஷிப்பிங் துறையில் வேலை செய்து வந்தேன். அங்கேயே இருந்திருந்தால் பல கோடிகளை சம்பாதித்து இருப்பேன். இருப்பினும் சினிமா மீது கொண்ட ஆசையால் இன்று நடிகையாக இருக்கிறேன். என் மனதுக்கு நிறைவாக உள்ளது.

Comments (0)
Add Comment