தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் பதவியேற்பு.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் பதவியேற்பு.

தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி புதிய ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Comments (0)
Add Comment