கேட்டது செல்ஃபி: கொடுத்தது உம்மா...: அதிர்ந்து போன நடிகை
கரம் மசாலா படத்தின் மூலம் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை நிகிதா ராவல். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அங்கு ஏராளமான ரசிகர், ரசிகைகள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது திடீரென ஒரு ரசிகை நிகிதாராவலிடம் சென்று செல்பி எடுக்கலாமா? என கேட்டார். நிகிதாவும் செல்பி எடுப்பதற்கு சம்மதிக்க அந்த ரசிகை ஆர்வமோடு செல்பி எடுத்துக் கொண்டார். அதன் பிறகும் அந்த ரசியை அவர் மீதான கிரேஸ் குறையவில்லை.. திடீரென நிகிதாவை கட்டிப்பிடித்து முத்தமிட தொடங்கினார். அதோடு விடவில்லை,வலுக்கட்டாயமாக நிகிதாவின் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு திக்கு முக்காட செய்துவிட்டார். ஒரு வழியாக ரசிகையிடம் இருந்து நிகிதா ராவல் மீண்டார். இதனால் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காகி வருகிறது.