அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்ப்பு.
சென்னை ராயப்பேட்டை வில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சர்னுமான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக கூறியவர் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தன்னுடைய சுற்றுப்பயணம் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
மக்களுக்காக எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தொடங்கினர்.
தீய சக்தி தி.மு.கவை ஒழிக்க வேண்டும் என்றார்..
அதற்காகத்தான் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை 7. ந் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் தொடங்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
தி.மு.க.ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்கிற கட்சிகள் எல்லாம் எங்களோடு அணி சேர வேண்டும்.
– வீடு வீடாக போய் கதவை தட்டி உறுப்பினர் சேர்க்கும் நிலைக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
– இந்தப் இந்த சுற்றுப்பயணம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும்.
– திமுகவை ஆட்சியை வ அகற்ற வேண்டும் என்று எண்ணுகின்ற அனைத்து தோழமைக் கட்சிகளையும் இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்க என் அழைப்பை பதிவு செய்கிறேன்.
– அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு அது விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
– வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு மிக வலுவான கூட்டணி உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
– மேலும் திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை என்னன்னு நிறைவேற்றப்பட்டது என்னென்ன நிறைவேற்றப்படவில்லை எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பதை குறித்து எல்லாம் இந்த சுற்று பணிகளை மக்களிடம் எடுத்துரைப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.