அவசரமாக சென்னை திரும்பிய அஜித்

அவசரமாக சென்னை திரும்பிய அஜித்
நடிகர் அஜித் துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்று வந்தார்.இந்நிலையில் இஸ்ரேல்,ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக துபாய் மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து துபாய் விமான நிலையம் திடீரென மூடப்பட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.திரை உலக பிரபலங்கள் பலர் துபாயில் சிக்கி தவித்தனர்.பின்னர் அவர்கள் தொடர்ந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த ஊர் சென்றடைந்தனர். அதேபோல் துபாயில் இருந்த அஜித் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.தற்போது அங்கு விமான நிலைய கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதால் நடிகர் அஜித் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.

Comments (0)
Add Comment