மீண்டும் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினி

மீண்டும் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினி
தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுக மானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அடுத்ததாக கௌவுதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ மற்றும் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார்.லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா, தற்போது புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜீவா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற தலைவர் தம்பி தலைமையில் படத்தை தயாரித்தவர் ஆவார். மேலும் பல மொழிகளில் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் ஐஸ்வர்யா படத்தையும் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Comments (0)
Add Comment