மலையாள இயக்குனரை மணந்த நடிகை ரவீணா ரவி
பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி, நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால் உள்பட பல கதாநாயகிகளுக்கு தமிழ், மலையாளப் படங்களில் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.’ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து, ‘ராக்கி’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தேவன் ஜெயக்குமார் இயக்கிய ‘வாலாட்டி’ என்ற மலையாளப் படத்தில் டப்பிங் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை 2024ம் ஆண்டு அக்டோபரில் இருவரும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில், ரவீணா ரவி – தேவன் ஜெயக்குமார் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. அவர்கள் திருமணத்துக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.