திரிஷாவுக்கு “என்னவொர் பிறந்த நாள் பரிசு”!

திரிஷாவுக்கு “என்னவொர் பிறந்த நாள் பரிசு”!
நடிகை திரிஷா தனது பிறந்த நாளை கடந்த 4ம் தேதி சிறப்பாக கொண்டாடினார். இதை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அதிகாலையில் தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பி அவர், நேராக தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு சென்று தேர்தல் வெற்றிக்கு அவரை வாழ்த்திவிட்டு, தனது பிறந்தநாளுக்கு அவரிடம் வாழ்த்து பெற்று விட்டு அங்கிருந்து கிளம்பினார். இந்த நிலையில், த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை ராதிகா சரத்குமார் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், “என்னவொர் பிறந்த நாள் பரிசு” எனக் கூறியுள்ளது வைரலாகியுள்ளது.இது விஜய்யின் வெற்றியைக் குறிப்பிட்டு சொல்லி இருப்பதால் சோசியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.

Comments (0)
Add Comment