ஒரே இரவில் நடக்கும் கதை திக். திக்.. திக்…
ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘திக். திக்.. திக்…’ என பெயரிட்டுள்ளனர்.ஒரே இரவில் நடக்கும் பரபரப்பான த்ரில்லர் கதையான இப்படத்தை ஜேஎஸ் கே சதீஷ் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக அறிமுகமாகிறார். ரகு ராஜகோபாலுடன் இணைந்து இப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். சென்னையில் ஒரே இரவில் நடைபெறும் பரபரப்பான த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இதில் பாவல் நவகீதன், ஜேஎஸ் சதீஷ் குமார், சாந்தினி தமிழரசன், சாண்ட்ரா ஏமி மற்றும் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ரகு ராஜகோபால் ஒளிப்பதிவு செய்ய டிகே இசையமைக் கிறார்.