இலவசமாக படம் பார்க்க புதிய ஓடிடி தளம்
யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற ஓ டி டி டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.இந்த ஓடிடி தளத்தில் இலவசமாக திரைப்படத்தை பார்க்கலாம். அதே சமயம் நாம் ஏதாவது பங்களிப்பு செய்ய விரும்பினால் அதையும் நன்கொடையாக தாராளமாக அளிக்கலாம். அந்த தொகை ஆதரவற்ற மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும். இந்த ஓடிடி துவக்க விழாவில் ஆர்.கே. செல்வமணி, எஸ்வி சேகர் யோகி செய்து போஸ் வெங்கட் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் தற்போது மனிதம், வி3, கோட்டா, மெல்லிசை, தாவுத், ஓ பட்டர்ஃபிளை ஆகிய படங்களின் ட்ரெய்லர் உள்ளது.